பக்கம் தான் இருப்பினும் எட்டா தூரத்தில் என் நிலா!
கதை கூறுவதற்கோ,
இல்லை குறை கூருவதற்கோ,
தொனிக்கும் அந்த குரல்!
கோபமாய் நான் இருப்பினும்,
குறும்பாய் முத்தமிட்டு
முறுவலிக்கும் அந்த இதழ்!
அழவேண்டும் என என்னும்
போதெல்லாம்,
அணைக்க காத்திருந்த அந்த கரம்,
பிடித்ததை எல்லாம் ரசித்து வாங்கி இருவரும் ஒன்றாய்
ரசித்த கணம்!
இவற்றை எல்லாம்
எண்ணி எண்ணி
ஏனோ நொந்துபோகிறது என் மனம்!
பகலில் தான் நினைத்து நொந்து போகிறதென்றால்
இரவில் இமை அணைக்கையிலும்
ஏங்கி போகும் கணம்
உணர்ந்தேன்
உடலை தாண்டி மனதையும் கவந்து விட்டாய் என்று!
Comments
Post a Comment